தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘திராவிட கட்சிகள் இந்திய மக்களை பிளவுபடுத்தும் வேலையை செய்கிறது’ - மத்திய அமைச்சர் பியூஸ்கோயல்! - அண்ணாமலை

திராவிட கட்சிகள் இந்திய மக்களை பிளவுபடுத்தும் வேலையை செய்து வருவதாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ்கோயல் விமர்சித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 9:53 PM IST

மத்திய அமைச்சர் பியூஸ்கோயல்

கோவையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (sima) சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (ஆக.31) கோவை வந்தார். பின்னர் பந்தைய சாலையில் உள்ள தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க வளாகத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சரும், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் நிருவனருமான ஆர்.கே.சண்முகம் செட்டி அவர்களின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.

அப்போது மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா வி.ஜர்தோஸ், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மத்திய அமைச்சர் பியூஸ்கோயல், “தமிழ்நாடு மக்கள் அனைவரையும் இணைக்கும் வகையில் இளம் தலைவரான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடத்தி வரும் 'என் மண், என் மக்கள்' யாத்திரை தமிழக மக்கள் ஒவ்வொருவரின் நெஞ்சில் இடம் பிடித்துள்ளது.

உலக அளவில் தமிழ்நாடு பெருமை அடைய வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர் அண்ணாமலை 'வாசுதேவ குடும்பகம்' எனும் நமது பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்த உலகம் ஒரே குடும்பம் என்கிற எண்ணத்தில் இந்தியாவோடு சேர்ந்து தமிழ்நாட்டையும் தமிழ்நாடு மக்களையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஒரு உலகம் ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம் என்கிற கருத்தை முன்வைத்துள்ளார், துரதிஷ்டவசமாக சில திராவிட கட்சிகள் இந்திய மக்களை பிளவுபடுத்தும் வேலையை செய்து வருகின்றனர்,
மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும் மக்களை பிளவுபடுத்தி வருகின்றனர். ஆனால், அண்ணாமலை நமது ஒற்றுமையை தமிழகத்தின் எல்லா பகுதிக்கும் எடுத்துச் சென்று வருகிறார்

தமிழக மக்கள் பாரத பிரதமரோடும் அண்ணாமலையோடும் சேர்ந்து இருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். தமிழக மக்கள் ஊழலற்ற மாநிலத்தை உருவாக்க உறுதுணையாக இருப்பார்கள். ஸ்டாலின் தலைமையிலான ஊழல் அரசை விலக்கி இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் தமிழ்நாடு இழந்த முன்னணி இடத்தை மீண்டும் பெற்றிடும்.

ஜவுளித்துறையில் சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா ஆகியவை பல்வேறு விலை மாற்றங்களை சந்தித்து வருகிறது. நமது ஜவுளித்துறை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து எதிர்காலத்தில் இந்தியாவை ஜவுளி துறையின் மையமாக உருவாக்கும் என உறுதியாக நம்புகிறேன். அதில் தமிழ்நாடும் முக்கிய பங்கு வகிக்கும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பி.எஸ்.ஜி கோப்பை கூடைப்பந்து: சென்னை வருமானவரித்துறை அணி அபார வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details