தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபுல் பட்டேலைக் கண்டித்து திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம் - praphul patel

கோயமுத்தூர்: லட்சத்தீவின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள பிரபுல் பட்டேலைக் கண்டித்து திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம், அதன் தோழமைக் கட்சிகளின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரபுல் பட்டேலைக் கண்டித்து திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்
பிரபுல் பட்டேலைக் கண்டித்து திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்

By

Published : Jun 1, 2021, 1:57 PM IST

Updated : Jun 1, 2021, 2:42 PM IST

ஆர்ப்பாட்டத்தின்போது, திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெண்மணி,ஆர்எஸ்எஸ் செயல்திட்டங்களை லட்சத்தீவில் புகுத்துகின்ற பிரபுல் பட்டேலின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "குஜராத் மாநிலத்தின் உள் துறை துணை அமைச்சரான பிரபுல் பட்டேல், லட்சத்தீவின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட பின்பு, ஆர்எஸ்எஸ் செயல்திட்டங்களை லட்சத்தீவில் புகுத்துகின்ற செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.

இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். என்டிஆர் என்ற பெயரில் புதிதாகப், பல்வேறுவிதமான சட்டங்களை இயற்றியிருக்கிறார். 'க்ரைம் ரேட்' என்ற அடிப்படையில் குற்றமே இல்லாத லட்சத்தீவில் குற்றவாளிகளைத் தடுக்கிறோம் என்ற பெயரில் தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு இணையாக ஒரு சட்டத்தை இயற்றி 10 ஆண்டுகள் தண்டனை பெறும் வகையில் சட்டங்களை இயற்றிவருகின்றார்.

மாட்டிறைச்சி சாப்பிட்டால் 10 ஆண்டுகள் சிறை

அங்கு இருக்கக்கூடிய பள்ளி குழந்தைகளுக்கு தினமும், மதிய உணவில் மாட்டிறைச்சி தருவதை தடைசெய்து, மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ, சாப்பிட்டாலோ, விற்பனை செய்தாலோ 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்று லட்சத்தீவினுடைய அடிப்படை உரிமைகள் பாதிக்கின்ற வகையில் செயல்படுகிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டுவருகின்றார். இவரின் செயல்பாடுகளை எதிர்த்து திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளோம்" என்று தெரிவித்தார்.

பிரபுல் பட்டேலைக் கண்டித்து திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்

மேலும் இது குறித்து குடியரசுத் தலைவருக்கு திராவிடர் பண்பாட்டு இயக்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: 'சிலரின் அலட்சியத்தால்தான் இரண்டாம் அலை' - ஸ்டாலின்

Last Updated : Jun 1, 2021, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details