கோயம்புத்தூர்:கோவில்பாளையம் அருகே கீரநத்தம் - புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், மாரிமுத்து. இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, தனது வீட்டில் வளர்த்து வரும் நாயை, கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாகத் தாக்கி, அதைத் துன்புறுத்தி விரட்டியடித்தார்.
இதைக்கண்டு பரிதாபம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், அவர் நாயை துன்புறுத்தும் காட்சியை செல்போன் மூலம் ஒளிப்பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோவை பார்த்த, கோயம்புத்தூரைச் சேர்ந்த பிராணிகள் நலச்சங்க நிர்வாகி மினிவாசுதேவன், மாரிமுத்துவின் வீட்டுக்கு நேரில் சென்றுள்ளார்.
பின்னர் அவரிடம் நாயைத் தாக்கியதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார். அப்போது பிராணிகள் நலச் சங்க நிர்வாகியை, மாரிமுத்து சரமாரியாக ஆபாச வார்த்தையில் திட்டியும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் எச்சரித்துள்ளார்.
நாய் மீது தாக்குதல் நடத்தும் காட்சி இதனையடுத்து மினி வாசுதேவன், கோவில்பாளையம் காவல் நிலையத்தில் மாரிமுத்து மீது புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், நாயைத் துன்புறுத்தி, சித்ரவதை செய்த குற்றத்திற்காக மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, அவினாசி கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பண மோசடி செய்த பைனான்சியரை தாக்கிய கும்பல்