கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலம் முன்பு பாரத் ஸ்டேட் வங்கியின் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான ஆவணங்கள் சாலையில் கிடந்துள்ளன. இதில் வங்கியின் பல்வேறு கிளைகளின் பெயர்கள், பல நபர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தன.
சாலையில் சிதறிக்கிடந்த பாரத் ஸ்டேட் வங்கி ஆவணங்கள்! - சாலையில் சிதறிக்கிடந்த பாரத் ஸ்டேட் வங்கியின் ஆவணங்கள்
பாரத் ஸ்டேட் வங்கியின் ஆவணங்கள் சாலையோரம் சிதறி கிடந்ததைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
![சாலையில் சிதறிக்கிடந்த பாரத் ஸ்டேட் வங்கி ஆவணங்கள்! Documents of State Bank of india](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10396789-1017-10396789-1611734814785.jpg)
பாரத் ஸ்டேட் வங்கியின் ஆவணங்கள்
இது குறித்து காவல்துறையினர் பாரத் ஸ்டேட் வங்கியை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல வங்கியின் பெயரிலான ஆவணங்கள் கீழே சிதறிக் கிடப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.