தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு: தாய் தற்கொலை முயற்சி - டெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழப்பு

கோவை: மேட்டுப்பாளையம் அருகே டெங்கு காய்ச்சலால் மருத்துவர் உயிரிழந்தார், அதனால் துக்கம் தாளாத அவரது தாயார் தற்கொலைக்கு முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

dengue-fever
dengue-fever

By

Published : Apr 16, 2020, 9:44 AM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை ரயான் நகரைச் சேர்ந்தவர் ஜெயமோகன்(30). எம்.பி.பி.எஸ். முடித்த அவர், நீலகிரி மாவட்டம் அள்ளி மாயார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் அவர் கடந்த 10ஆம் தேதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சொந்த ஊரான சிறுமுகைக்கு வந்தார். அதையடுத்து அவர் தீவிரக் காய்ச்சல் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரின் ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன, அதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதையடுத்து இன்று அதிகாலை அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தியை அறிந்த அவரது தாயார், துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:டெங்கு காய்ச்சலா, கொரோனா வைரஸா? - சேலத்தில் இளைஞருக்கு தீவிர சிகிச்சை

ABOUT THE AUTHOR

...view details