கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கூடிய 300க்கும் மேற்பட்ட திமுகவினர் ஒன்று கூடி சூயஸ் நிறுவனத்தை எதிர்த்தும், சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
சொத்து வரியை உயர்வைக் கண்டித்து திமுக போராட்டம் - எம்எல்ஏ கார்த்திக் பங்கேற்பு
கோவை: சொத்துவரி உயர்வை ரத்து செய்யக் கோரி தெற்கு வட்டாசியர் அலுவலகம் முன்பு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ கார்த்திக் பேசுகையில், ‘குடிநீர் விநியோகம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கபட்டது கண்டனத்திற்குரியது. அதேபோல் சொத்து வரி உயர்வு மக்களுக்கு பெரும் சிரமத்தை அளித்துள்ளது. இதை உனடியாக ரத்து செய்ய வேண்டும். மேலும் மாவட்டம் முழுவதும் சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளததால், குண்டும் குழியுமாக உள்ளது. இதை சீர்செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை’ என குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க:அரசு நிலத்தை தரக்கோரி மக்கள் போராட்டம்...