தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 6, 2021, 2:46 PM IST

ETV Bharat / state

எஸ்.பி. வேலுமணி மே 3ஆம் தேதி சிறையில் இருப்பார் - கார்த்திகேய சிவசேனாபதி

தேர்தல் எல்லாம் முடிந்ததும் அமைச்சர் எஸ்பி வேலுமணி மே 3 ஆம் தேதி சிறையில் இருப்பார் என கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

கார்த்திகேய சிவசேனாபதி
கார்த்திகேய சிவசேனாபதி

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்தநிலையில் கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேயே சிவசேனாபதி வாக்குச்சாவடிகளை பார்வையிடச் சென்றபோது அவரது காரை சிலர் வழிமறுத்து அவரைத் தாக்க முற்பட்டனர். இந்த தாக்குதல் குறித்த காட்சிகளை தனது முகநூல் பக்கத்திலும் பதிவேற்றியிருந்தார்.

அந்த தாக்குதல் குறித்து, கார்த்திகேய சிவசேனாபதி, தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியரான நாகராஜிடம் புகார் அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," இன்று காலை முதல் தொண்டாமுத்தூர் தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளையும் சென்று பார்வையிட்டு வந்தேன். செல்வபுரம் பகுதியில் வந்து கொண்டிருக்கும்பொழுது அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அடியாட்கள், ஆதரவாளர்கள் உட்பட அடையாளம் காட்டக்கூடிய நபர்கள் என் வாகனத்தை வழிமறித்து தகாத முறையில் பேசினார்கள்; கொலை மிரட்டல் விடுத்தார்கள். இதனால் அந்த பகுதியில் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. அது மட்டுமின்றி, இதுபோன்ற சம்பவங்களால் அப்பகுதியில் உள்ள பெண்கள், வயதானவர்கள் வாக்களிக்க தயங்குகின்றனர்.

எஸ்.பி. வேலுமணி மே 3ஆம் தேதி சிறையிலிருப்பார் - கார்த்திகேய சிவசேனாபதி பேட்டி

இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளோம். மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளோம். இந்த சம்பவம் நடக்கும்போது அப்பகுதியில் இருந்த காவல் துறையினர் கலவரக்காரர்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். எல்லாமே இரண்டாம் தேதியன்று முடிந்துவிடும். மே 3ஆம் தேதி அன்று அமைச்சர் வேலுமணி சிறையில் இருப்பார் என்றார்.

இதையும் படிங்க:திமுக வேட்பாளரின் காரை வழிமறித்த நபர்களால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details