கோயம்புத்தூர்: தெற்கு வட்டாட்சியர் அலுவகம் முன்பாக வேளாண் சட்டங்களை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், கொங்குநாடு மக்கள் கட்சியின் பொது செயலாளர் கொங்கு ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்து இன்று (செப்.28) தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன், தொடர்ச்சியாக கோவையிலும் பல்வேறு இடங்களில் திமுக உள்ளிட்ட பல கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், கொங்குநாடு மக்கள் கட்சியின் பொது செயலாளர் கொங்கு ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசை கண்டுத்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய கொங்கு நாடு மக்கள் கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் கூரியதாவது, “மத்திய அரசு எதை கொண்டு வந்தாலும் அதை ஆதரிக்க கூடிய அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது. விவசாயிகளுக்கு எதிரான சட்டம் என்று தெரிந்தும் கூட தமிழ்நாடு அரசு அதனை எதிர்க்கவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர், இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நல்லது என்று கூறிக் கொண்டிருக்கிறார்.