தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து அவதூறு: தென்றல் செல்வராஜ் கைது

கோயம்புத்தூர்: உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திமுக மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், அவரது உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Minister velumani viral video
Minister SP velumani latest news

By

Published : Jun 2, 2020, 11:40 PM IST

மே 26ஆம் தேதி அன்று கிணத்துக்கடவுக்கு அருகேயுள்ள சிங்கையின் புதூர் பகுதியிலிருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதாகவும், லாரியில் அதிகளவு கற்கள் ஏற்றப்படுவதால் விபத்துகள் அதிகமாக நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு உள்ளாட்சித் துறை அமைச்சரும், கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகம் துணைபோவதாகவும் கூறி சார் ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறையிடம் திமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகம் ஆகியோரை தவறாக சித்தரிப்பதாகக் கூறி காவல் துறையினர் திமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரையும் குமரன் நகர் வீட்டில், கடந்த 31ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்த போலீசார் கோபி கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details