கோயம்புத்தூர், சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் மாசானமுத்து. இவர் அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுரான ’மீன்கடை சிவா’ என்பவர், தன் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியதாக மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திமுக பிரமுகர் கொலை வெறித்தாக்குதல் : மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் - திமுக பிரமுகர் கொலை வெறிதாக்குதல்
கோயம்புத்தூர் : திமுக பிரமுகர் கொலை வெறித்தாக்குதல் நடத்தியதாக மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாசானமுத்து, ”மீன்கடை சிவா அரசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர், முதலமைச்சர் தனிப்பிரிவு, உள்ளிட்ட 16 இடங்களில் புகார் அளித்திருந்தேன். இந்நிலையில், சிவா, சத்யா என்பவர் மூலம் என்னைக் கொலை செய்ய முயற்சித்தார்.
எனவே நான் அவர்களுக்கு பயந்து ஊருக்குச் சென்றுவிட்டேன். கோயம்புத்தூருக்கு வந்து ஒரு வார காலமே ஆகியுள்ள நிலையில், நேற்றிரவு (நவ.23) சிங்காநல்லூர் பகுதியில் நான் சென்று கொண்டிருந்தபோது, சிவா, சத்யா இருவரும் என்னை வழிமறித்து ஆயுதங்கள் சகிதம் என்னைத் தாக்கினர். இவர்கள் இருவர் மீதும், உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் கூறினார்.