தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

15 வீடுகளுக்கு வாடகை வசூலிக்காமல் அரிசி கொடுத்து உதவிய திமுக பிரமுகர் - coimbatore latest news

கோவை: கரோனா தொற்றுப் பரவல் சூழலில் தனது வீட்டில் வசிப்பவர்களிடம் திமுக பிரமுகர் ஒருவர் வாடகை வாங்காத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பிரமுகர்
திமுக பிரமுகர்

By

Published : May 29, 2021, 9:01 PM IST

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுபக்குமார். திமுக பிரமுகரான இவர் ஊரடங்கால் சிரமப்படும் மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க, பல உதவிகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் அவரது வீட்டில் குடியிருக்கும் 15 வாடகை வீட்டாரிடம் இம்மாத வாடகை வேண்டாம் என்று கூறியதோடு, அவர்களுக்கு தலா 25 கிலோ அரிசி மூட்டைகளையும் வழங்கியுள்ளார். மேலும் அங்கு வசிக்கும் திருநங்கைகளுக்கும் அரிசி மூட்டைகள், முகக் கவசங்கள் உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.

அதேபோல் அப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் சிரமப்படும் 40 குடும்பங்களுக்கும் அரிசி, காய்கறி, பிரட், முகக்கவசம் உள்ளிட்டவற்றையும் கொடுத்தார். இவரின் இந்த சேவையைப் பலரும் பாராட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details