கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் தற்போது கரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் தற்காலிகமாக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை திமுக எம்பி சண்முகசுந்தரம் திறந்து வைத்தார்.
வால்பாறையில் தற்காலிக கரோனா சிகிச்சை மருத்துவமனை - திமுக எம்.பி, சண்முகசுந்தரம்
கோயம்புத்தூர்: வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கரோனா சிகிச்சை மருத்துவமனையை திமுக எம்பி சண்முகசுந்தரம் திறந்து வைத்தார்.
![வால்பாறையில் தற்காலிக கரோனா சிகிச்சை மருத்துவமனை மருத்துவமனை திறப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:32:04:1621864924-tn-cbe-02-valpari-mp-function-vis-tn10008-24052021190157-2405f-1621863117-779.jpg)
மருத்துவமனை திறப்பு
இந்த மருத்துவமனையில் 150 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மருத்துவமனைக்கு தேவையான மருந்துகள், ஆக்ஸிஜன், முகக் கவசம், கையுறை, சானிடைசர் ஆகிய வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.