இதுதொடர்பாக வடகோவை திமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கார்த்திக் பேசுகையில், ' கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள 960 ஹவுசிங் யூனிட் குடியிருப்புகள் 35 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் கட்டப்பட்டன. தற்போது அந்த குடியிருப்பு வீடுகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்தப் பிரச்னை குறித்து மூன்றாண்டுகளுக்கு முன்பே சட்டப்பேரவையில் நான் தெரிவித்தேன். ஆனால், அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த வாரம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். அதேபோன்ற சம்பவங்கள் கோவையிலும் நடைபெறக் கூடாது. எனவே சிங்காநல்லூர் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டு வசதி வாரியம் மூலம் அரசு புதிய வீடுகள் கட்டித் தரவேண்டும்.