தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் குறைதீர் முகாம்: திமுக எம்எல்ஏ வந்ததால் பரபரப்பு! - முதலமைச்சர் குறைதீர் முகாமிற்கு திமுக எம்எல்ஏ வந்தததால் பரபரப்பு

கோவை: முதலமைச்சர் குறைதீர் முகாமிற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் வருகை புரிந்ததைத் தொடர்ந்து, காவல் துறையினர் அவரை தடுத்து நிறுத்தியதால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

DMK MLA

By

Published : Nov 21, 2019, 8:52 PM IST

கோவை வரதராஜ புரத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் உள்ளாட்சி மற்றும் ஊரகத்துறை அமைச்சர் வேலுமணி கலந்துகொண்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பின் மக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதில் 1,362 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் சலவை பெட்டி, தையல் இயந்திரம், வாகனம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மனு அளிக்க வந்தார். ஆனால் அவர் மனு அளிக்க காவல் துறையினர் அனுமதி தர மறுத்தனர். இதனால் அவர் கண்டனம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

அதிமுக நிகழ்ச்சிக்கு திமுக எம்எல்ஏ வந்ததால் பரபரப்பு

அதன்பின் பேசிய அமைச்சர் வேலுமணி கூறுகையில், பல்வேறு கோரிக்கைகள் வந்ததன் அடிப்படையில் மறைமுக மேயர் தேர்தல் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் உள்ளாட்சி தேர்தலை தேர்தல் ஆணையம் தான் நடத்துகிறது எனவும் கூறினார்.

மேலும், அதிமுக யாரையும் புறக்கணிக்கும் நோக்கில் இல்லை என்றும், மக்கள் பிரதிநிதிகள் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் எப்போது? அமைச்சர் வேலுமணியின் பதில்கள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details