தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் - கோவை செல்வராஜ் - DMK

அதிமுகவில் இருந்து 3 ஆயிரம் பேர் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக கோவை செல்வராஜ் தெரிவித்தார்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

By

Published : Dec 18, 2022, 6:28 PM IST

கோவை செல்வராஜ் செய்தியாளர் சந்திப்பு..

கோயம்புத்தூர்:அதிமுக ஓபிஎஸ் அணியில் இருந்து அண்மையில் விலகிய கோவை செல்வராஜ், அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து கோவை செல்வராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறியதாவது, "முந்தைய அதிமுக ஆட்சியில் நடைபெற்ற எல்இடி பல்பு ஊழல், கோவையில் குளங்கள் தூர்வாரும் பணியில் நடந்த ஊழல் உள்ளிட்டப் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தன்னிடம் ஆதாரங்கள் இருக்கிறது.

அடுத்த வாரம் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் நேரில் ஒப்படைக்க உள்ளேன். கோவை மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் உள்பட 3 ஆயிரம் பேர் அதிமுகவில் இருந்து விலகி விரைவில் முதலமைச்சர் தலைமையில் திமுகவில் இணைய உள்ளனர்.

கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முதலில் மத்திய அரசிடம் பேசி தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதிகளை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாஜகவிற்கு தமிழ்நாட்டில் வருங்காலம் இல்லை. ஓ.பி.எஸ்.சிடம் உண்மையாக இருந்த போதும், அவர் அவ்வாறு இல்லை. அவர் குறித்து விமர்சிக்க எதுவும் இல்லை.

சாலைகள் சேதம் குறித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான் விளக்கம் அளிக்க வேண்டும். தமிழக அரசு மீதான அரசியல் காரணங்களுக்காக அவர் குற்றம் சாட்டி வருகிறார்’ என கோவை செல்வராஜ் தெரிவித்தார்.

அன்னூர் டிட்கோ விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சுமார் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதைத் தடுக்கும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், அதிமுக நான்கு அணிகளாக இருப்பதாகவும், விரைவில் ஆறு மாதத்திற்குள் அந்த கட்சி கரைந்து போகும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க:Rafale watch கட்டுனது குத்தமா.? ட்விட்டரில் அடித்துக்கொள்ளும் அண்ணாமலை Vs செந்தில் பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details