தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பிய திமுக பிரமுகர் கைது - dmk member arrested for defaming S P Velumani

கோவை: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி குறித்து முகநூலில் ஆபாசமாக பதிவிட்ட கோவை தெற்கு மாவட்ட தி.மு.க இளைஞர் அணி துணை அமைப்பாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.

dmk member arrested for defaming minister S P Velumani
dmk member arrested for defaming minister S P Velumani

By

Published : Jan 21, 2021, 11:50 PM IST

கோவை தெற்கு திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணியை பெண் போல மார்ஃபிங் செய்யப்பட்ட படமும், ஆபாச வார்த்தைகள் மூலமும் தன் முகநூலில் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக அடிப்படை உறுப்பினர் செல்வராஜ் நேற்று (ஜன.20) நவநீதகிருஷ்ணனிடம் சென்று அமைச்சர் குறித்து அவதூறு பரப்புவது தவறு எனக் கூறியுள்ளார். இதனால் நவநீதகிருஷ்ணன் செல்வராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பொதுமக்கள் சார்பில் மனு

இதனையடுத்து செல்வராஜ் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கே.ஜி. சிவக்குமார் உத்தரவின் பேரில் ஆய்வாளர் வைரம் சம்பவம் குறித்து விசாரணை செய்தார். அதில் நவநீதகிருஷ்ணன் அவதூறு பரப்பியது உறுதியானது.

இதைத்தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தை பேசுதல், ஆபாசமாக முகநூலில் பதிவிட்டது என ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதேபோல சொலவம்பாளையம் ஊராட்சி இம்மிடிபாளையத்தை சேர்ந்த பெரியார் மணி என்பவர் சமூக ஆர்வலர் என்று கூறிக் கொண்டு திமுகவின் தூண்டுதலின் பேரில் சாதி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என ஆட்சியரிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...சாரட்டு வண்டியில் வந்த சாதனை வீரர் நடராஜன்: சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

ABOUT THE AUTHOR

...view details