தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுகாதாரத் துறை அலுவலர்களை மிரட்டிய திமுக பிரமுகர் கைது! - சுகாதாரத் துறை அலுவலர்களை மிரட்டிய திமுக பிரமுகர்

கோயம்புத்தூர்: போத்தனூர் அருகே சளி, இருமல், காய்ச்சலுக்கு கணக்கெடுக்கச் சென்ற சுகாதார அதிகாரிகளை மிரட்டிய திமுக பிரமுகரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கரோனாவிற்கு கணக்கெடுக்க சென்ற சுகாதாரத் துறை அலுவலர்களை மிரட்டிய திமுக பிரமுகர்!
கரோனாவிற்கு கணக்கெடுக்க சென்ற சுகாதாரத் துறை அலுவலர்களை மிரட்டிய திமுக பிரமுகர்!

By

Published : Apr 5, 2020, 8:09 PM IST

கரோனா வைரஸ் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத் துறையினர் வெளிநாட்டிலிருந்து வந்து சென்றவர்கள், சளி, இருமல், காய்ச்சல் அறிகுறியுடன் இருப்பவர்கள் அனைவரையும் கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக கோயம்புத்தூர் மாநகராட்சி முழுவதும் உள்ள அனைத்து வீடுகளிலும் மாநகராட்சி அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை, அங்கன்வாடி ஊழியர்கள் சென்று காய்ச்சல், இருமல், சளி உள்ளதா என்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதாரத் துறை அலுவலர்களை மிரட்டிய திமுக பிரமுகர்!

இந்தநிலையில் கோயம்புத்தூர் கரும்புக்கடைப் பகுதியில் மூன்று பெண் சுகாதாரத்துறை, அங்கன்வாடி ஊழியர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் இஸ்மாயில் என்பவர் அந்தப் பெண் ஊழியர்களிடம் அவதூறாக பேசியுள்ளார்.

இதனை அந்த பெண் ஊழியர் ஒருவர் அவருடைய செல்போனில் வீடியோ பதிவும் செய்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து, திமுக பிரமுகர் இஸ்மாயிலை கைது செய்தனர். அவர் மீது அரசு ஊழியரைப் பணிச் செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க...ஊரடங்கு உத்தரவு: இந்த பொன்னான வாய்ப்பை முறையாக பயன்படுத்துங்கள் - ஏடிஜிபி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details