திமுக தலைவர் ஸ்டாலினின் 68ஆவது பிறந்த நாள் விழாவை மாநிலம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். இதனையொட்டி கோவை மாவட்டம் பொள்ளாச்சி அய்யம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள சினேகாலயா மனவளர்ச்சி குன்றிய மற்றும் ஆதரவற்றோர் காப்பகத்தில் மாநில நெசவாளர் அணி சார்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
கோவை ஆதரவற்றோர் இல்லத்தில் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் - திமுக தலைவர் ஸ்டாலின்
கோவை: சினேகாலயா மனவளர்ச்சி குன்றிய மற்றும் ஆதரவற்றோர் காப்பகத்தில் திமுக மாநில நெசவாளர் அணி சார்பில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
நெசவாளர் அணி செயலாளர் கே. எம்.நாகராஜன் தலைமையில், பொள்ளாச்சி வடக்கு மத்திய ஒன்றிய கழக பொறுப்பாளர் அய்யம்பாளையம் ராசு முன்னிலையில் காப்பகத்தில் இருக்கும் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். இதேபோல, பொள்ளாச்சி நகர திமுக சார்பில் நகர கழக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் தலைமையில், திமுக அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் 68 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.