தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சியில் களைகட்டிய 'ரேக்ளா ரேஸ்' - குதிரை பந்தயம்

அழிந்துவரும் காளை மாடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்பட்ட ரேக்ளா ரேஸில் கலந்துகொண்ட 200-க்கும் மேற்பட்ட காளைகளைக் காண பொதுமக்கள் பலர் குவிந்தனர்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற ரேக்ளா ரேஸ் தொடர்பான காணொலி
பொள்ளாச்சியில் நடைபெற்ற ரேக்ளா ரேஸ் தொடர்பான காணொலி

By

Published : Nov 22, 2021, 6:59 AM IST

கோவை: பொள்ளாச்சியில் காளை மாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், ஜோதிநகர் 100 அடி சாலையில் ரேக்ளா பந்தய போட்டி நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கேரளா உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

மொத்தம் நான்கு பிரிவுகளில், 300 மீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைக் கடக்க சீறிப் பாய்ந்த காளைகளை ஏராளமான பொதுமக்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

பொள்ளாச்சியில் நடைபெற்ற ரேக்ளா ரேஸ் தொடர்பான காணொலி

இதேபோன்று 400 மீட்டர் தூர இலக்கில், நான்கு பிரிவுகளின்கீழ் குதிரைப் போட்டிகளும் நடைபெற்றன. இந்தப் போட்டிகள் அனைத்தும் திமுகவினரால் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Affection: ஈன்ற குட்டியைப் பிரித்ததாக நினைத்த தாய் எருமையின் பாசப்போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details