கோயம்புத்தூர் தடவத் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் கோயம்புத்தூர் எம்எல்ஏ கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுமார் ஆயிரம் கோடி செலவில் கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருகின்றன.
ஒரு மாத காலத்திற்கு முன் வாலங்குளம் பகுதியை பார்வையிட்ட போது அங்கு தரமில்லாத கட்டுமானப் பொருள்கள் இருந்தன. பழைய மார்க்கெட்டுகளில் பழைய பொருள்களை வாங்கி அதற்கு வண்ணம் தீட்டி வேலைகள் நடைபெற்று வருவதை பல்வேறு இடங்களில் காணமுடிகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடக்கும் வேலைகள் எல்லாம் ஊழல்கள் என்பது என்னுடைய அபிமானம். இயற்கை சூழலை இழந்த பந்தய சாலையை ஸ்மார்ட் சிட்டி என்று கூறி அங்குள்ள இயற்கை சூழலை அழித்துவிட்டனர்.
தரமற்ற பொருள்களை கொண்டு ஸ்மார்ட் சிட்டி என்று அதிகளவில் ஊழல் செய்யும் எஸ்.பி.வேலுமணியை கண்டித்து வருகின்ற 31ஆம் தேதி கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தை திமுக கிழக்கு மாநகர் சார்பில் முற்றுகையிட இருக்கின்றோம்.
தமிழ்நாடு பொங்கல் பரிசாக 2ஆயிரத்து 500 ரூபாய் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வழங்கப்படும் டோக்கன களில் அமைச்சரின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிட முடிவு பேனர்கள் போன்றவற்றை வைக்கக் கூடாது என நீதிமன்றம் கூறியிருந்தும் அதிமுக நிகழ்ச்சிகளில் அமைச்சரை வரவேற்று பல்வேறு இடங்களில் பெரிய பெரிய பேனர்கள் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன" எனக் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க:உதயசூரியன் பெயரில் திமுக 234 தொகுதிகளிலும் போட்டியிட தயாரா - செல்லூர் ராஜூ