கோயம்புத்தூர் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒன்றியம் கோட்டூர் பகுதியில் கிழக்கு திமுக ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ் தலைமையில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இதில் கலந்துகொண்ட அப்பகுதி மக்கள் தாங்கள் பயன்படுத்தும் குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதாகவும், குடிநீர் தூய்மையற்று இருப்பதாகவும், கடந்த 25 வருடங்களாக ஒரே பகுதியில் வாழும் மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.