கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியில் வசிக்கும் ஏழை. எளிய, நடுத்தர மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க முடியாமல் தவித்து வந்தனர்.
இதனை அறிந்த நெகமம் கே.வி.கே அறக்கட்டளை, நெகமம் நாகர் மைதானம், பழைய கடைவீதி, ஹைஸ்கூல் ரோடு, அண்ணா நகர், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்க முடிவு செய்தது.
அதன்படி, கே.வி.கே அறக்கட்டளை நிறுவனரும், திமுக கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவருமான கே.வி.கே.எஸ். சபரிகார்த்திகேயன் அரிசி, காய்கறிகள், ரவை, கோதுமை மாவு, மிளகாய், வெங்காயம், எண்ணெய், சானிட்டரி, நாப்கின் பாக்கெட், சமையலுக்கு தேவையான அனைத்து பொருள்கள் அடங்கிய தொகுப்பை ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு ரூ. 7 லட்சம் மதிப்பில் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நெகமம் பேரூர் கட்சி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : அட்சய திருதியை: கரோனா பாதிப்புக்கு மத்தியிலும் தொடரும் நகை விற்பனை!