கோவை பகுதியைச் சேர்ந்தவர் மு. இராமநாதன் (87). திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இவர் கடந்த இரண்டு வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி காலமானர்.
இவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை நேரில் வந்து அஞ்சலி செலுத்துகிறார். திமுகவில் பல்வேறு பொறுப்புகள் வகித்த இவர் 1996ஆம் ஆண்டு முதல் 1998வரை கோவை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.