தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாமரை சின்னத்தை அணிந்து வந்த வானதி மீது திமுக புகார்!

கட்சி சின்னமான தாமரையை அணிந்து வந்து வாக்களித்த வானதி சீனிவாசன் மீது திமுகவினர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.

VANATHI SRINIVASAN, வானதி சீனிவாசன்,கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்
தேர்தல் சின்னத்தை அணிந்துவந்த வானதி மீது திமுக புகார்

By

Published : Apr 8, 2021, 12:07 AM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் நேற்று(ஏப்.6) டாடாபாத் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் அவரது வாக்கினைப் பதிவு செய்தார். அப்பொழுது அவர், அவரது தேர்தல் சின்னமான தாமரையை சின்ன பேட்ஜில் வடிவில் அணிந்தவாறு வந்து வாக்களித்தார். தேர்தல் விதிமுறைகளின்படி வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்கு எவ்வித கட்சியின் சின்னங்களும், கட்சியின் கொடிகளும் இருக்கக் கூடாது. இந்நிலையில் வானதி சீனிவாசன் தனது கட்சியின் சின்னத்தை பேட்ஜில் அணிந்து வந்து வாக்களித்து தேர்தல் விதிமுறையை மீறியதாக, திமுக, காங்கிரஸ் தரப்பினர் தெற்கு தொகுதி தேர்தல் அலுவலர் சுப்பிரமணியனிடம் புகார் அளித்துள்ளனர்.

நேற்று பாஜகவினர் தேர்தலின் போது பணப்பட்டுவாடாவிற்கு டோக்கன்கள் வழங்கியதாக காங்கிரஸ், நாம் தமிழர் போன்ற கட்சியினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நன்றிக்குரியோரே! நல் உள்ளங்களே! நமக்கான பொறுப்பும் கடமையும் தொடர்கிறது! - மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details