தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது - அமைச்சர் வேலுமணி - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்தல் பிரச்சாரம்

கோவை: திமுக தேர்தல் அறிக்கை பொய்யானது. அதிமுக வெளியிடுவதுதான் உண்மையான தேர்தல் அறிக்கை என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

Minister velumani
அமைச்சர் வேலுமணி

By

Published : Mar 13, 2021, 7:13 PM IST

கோவையில் உள்ள இதய தெய்வம் மாளிகையில் அதிமுக தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கட்சி அலுவலகத்தில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அலை வீசுகிறது. ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை மட்டும் நிறைவேற்றாமல் மக்களுக்கு தேவையான பல திட்டங்களையும் பழனிசாமி அளித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிப் பெற்று மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பார்.

திமுகவின் தேர்தல் அறிக்கை பெய்யானது

திமுக அறிவிப்பது பொய்யான அறிக்கை. உண்மையான தேர்தல் அறிக்கை என்பது அதிமுக வெளியிடுவதுதான். முதலமைச்சர் ஏற்கனவே அறிக்கை தொடர்பான சிறு குறிப்பை தெரிவித்துவிட்டார்” என்றார்.

இதையும் படிங்க: 'ஸ்டாலினை முதலமைச்சராக்குவதே தலையாய கடமை' - தடங்கம் சுப்பிரமணி

ABOUT THE AUTHOR

...view details