கோவை ஆர்.எஸ். புரம் பகுதி சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் சீரமைக்கப்பட்டு அங்கு செல்பி ஸ்பாட் என்று ஆங்காங்கே பறவைகளின் இறகுகள், வண்ண விளக்குகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. அங்கு பொதுமக்கள் செல்பி எடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதிக்குச் சென்ற தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி காங்கேயன் காளையை அழைத்துச் சென்று பொதுமக்களிடம் செல்பி எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் காளையுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
செல்பி ஸ்பாட்டுக்கு காங்கேயம் காளையுடன் சென்ற திமுக வேட்பாளர்! - covai latest news
கோவை: திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி காங்கேயன் காளையை அழைத்துச் சென்று பொதுமக்களிடம் செல்பி எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
DMK_selfie
ஆர்.எஸ். புரம் பகுதியில் பொதுமக்கள் தினமும் செல்பி எடுக்கும் நிலையில் காளையை அழைத்துவந்து அதனுடன் செல்பி எடுக்கவைத்த திமுகவினர் செயல் அப்பகுதியில் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பரப்புரை!