தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக வேட்பாளரின் காரை வழிமறித்த நபர்களால் பரபரப்பு! - திமுக வேட்பாளர் கார் வழிமறிப்பு

கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரின் காரை அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திமுக வேட்பாளர் கார் வழிமறிப்பு
திமுக வேட்பாளர் கார் வழிமறிப்பு

By

Published : Apr 6, 2021, 1:58 PM IST

Updated : Apr 6, 2021, 2:48 PM IST

கோயம்புத்தூர் :கோயம்புத்தூர் தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். இவர் இன்று வாக்குச்சாவடிகளைப் பார்வையிட சென்று கொண்டிருந்தபோது, செல்வபுரம் என்ற பகுதியில் அவரது காரை சிலர் வழிமறித்து அவரை தாக்க முற்பட்டனர்.

இதனால் அங்கிருந்த திமுகவினருக்கும், தாக்க வந்தவர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர்.

திமுக வேட்பாளர் கார் வழிமறித்த நபர்களால் பரபரப்பு

தனது காரை வழிமறித்து தாக்க முயன்ற நபர்கள், பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கார்த்திகேய சிவசேனாபதி தொரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த திமுக வேட்பாளர் தன்னைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது.

இதையும் படிங்க:அதிமுகவுக்கு ஹாட்ரிக் வெற்றி - திண்டுக்கல் சீனிவாசன்

Last Updated : Apr 6, 2021, 2:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details