தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எவ்வளவு இடையூறு விதித்தாலும் அமைதியான முறையில் எதிர்கொள்வேன் - திமுக வேட்பாளர் - Coimbatore North Assembly constituency

கோயம்புத்தூர்: மத்திய, மாநில அரசுகள் எவ்வளவு இடையூறு விதித்தாலும் அமைதியான முறையில் அதனை எதிர்கொள்வேன் என திமுக வடக்கு சட்டப்பேரவை வேட்பாளர் சண்முகசுந்தரம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர் வாக்கு
திமுக வேட்பாளர் வாக்கு

By

Published : Mar 18, 2021, 4:49 PM IST

கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகசுந்தரம் இன்று (மார்ச் 18) ஜிசிடி அருகிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல்செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வரும் தேர்தலில் பெரும்பான்மையான வாக்குகளில் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்தத் தொகுதி அதிமுக கைவசம் இருந்தது. அப்பொழுது சட்டப்பேரவை உறுப்பினரை தொகுதி மக்கள் பார்ப்பதே மிகவும் அரிதாக இருந்தது.

திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம்

இந்தத் தொகுதியில் அடிப்படைத் தேவைகளாக உள்ள குடிநீர்ப் பிரச்சினை, சாக்கடை பிரச்சினை போன்றவற்றை உடனடியாகக் களைவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன். மேலும் நீண்ட காலப் பிரச்சினையாக உள்ள அருந்ததிய மக்களுக்கான பட்டா பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்துவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்வேன்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நிலம் இழந்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வராமல் இருக்கிறது. அதனைப் பெற்றுத்தர உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வேன். மத்திய, மாநில ஆளும் கட்சிகள் ஏதேனும் இடையூறு செய்தால் அமைதியான முறையில் அந்த இடையூறுகளை எதிர்கொள்வேன்" என்றார்.

இதையும் படிங்க:'கமல் ஒரு அரை வேக்காடு' - செந்தில் பாலாஜி தாக்கு

ABOUT THE AUTHOR

...view details