தமிழ்நாட்டில் கடந்த 7ஆம் தேதி மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுகவினர் கருப்பு சின்னம் அணிந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டம் ஒருபக்கம் இருந்தாலும், போராட்டம் செய்த திமுகவினரே மதுபானம் வாங்கிச் சென்றது தான் அக்கட்சியின் மூத்த தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மதுவிலக்கு காவல்துறையினர், ஒரு வீட்டில் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ய தயார் நிலையில் இருப்பதையும், இதில், அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகி முருகானந்தம் என்பவர் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.