தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வராஜ் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இந்தத் தேர்தலோடு அவர் அரசியலில் இருந்து காணாமல் போவார் என பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அவதூறாக பேசிய அதிமுக பிரமுகர் செல்வராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேமுதிகவினர் இரு தினங்களுக்கு முன்னர் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனையடுத்து செல்வராஜ் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து முன்னாள் சூலூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக உறுப்பினர் தினகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .