கோவை மாவட்ட அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வராஜ், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது தேமுதிக தலைவர் விஜயகாந்தைக் காணவில்லை எனக்கூறி விமர்சித்துள்ளார்.
அவரின் இந்தப்பேச்சைக் கண்டித்து, காந்திபார்க் பகுதியில் கோவை மாவட்ட தேமுதிகவினர் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் போது, செல்வராஜ் புகைப்படத்தை கால்களால் மிதித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முற்பட்டபோது, சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இறுதியில், அனைவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன்," இப்பிரச்னை தொடர்பாக அதிமுக தலைமை மன்னிப்பு கேட்டுள்ளது. ஆனால் அதை வெளிப்படையாகக் கேட்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடரும்.
கோவையில் அதிமுக செய்தி தொடர்பாளருக்கு எதிராக தேமுதிகவினர் போராட்டம் கூட்டணியில் இருக்கும் கட்சியின் தலைவரை கூட்டணி கட்சியினரே விமர்சிப்பது வருத்தத்திற்குரியது" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில், " தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எந்த நபருக்கும் விஜயகாந்த் பற்றி பேச அருகதையில்லை. தொலைக்காட்சி தரும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய்க்காக விஜயகாந்தை விமர்ச்சிக்க செல்வராஜிற்குத் தகுதியில்லை" என்றார்.