தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கொடநாடு கொலை பற்றி பேசும் ஸ்டாலினால் சாதிக் பாட்ஷா சாவு குறித்து கூற முடியுமா?' - சாதிக் பாஷா

கோவை: கொடநாடு கொலை சம்பவம் குறித்து விமர்சித்துவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின்போது தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சாதிக் பாட்ஷா எவ்வாறு உயிரிழந்தார் என்ற உண்மையை கூற முடியுமா? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்

By

Published : Mar 29, 2019, 8:45 AM IST

பொள்ளாச்சி தொகுதி அதிமுக வேட்பாளர்மகேந்திரனை ஆதரித்து கோவை செல்வபுரம் பகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பொள்ளாச்சி வழக்கில் தொடர்புள்ள காங்கிரஸ், திமுக நிர்வாகிகளுக்கு அழைப்பாணைஅனுப்பியும், அவர்கள் ஆஜராகவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக இந்த அதிமுக கூட்டணி அரசு இருக்கும். பெண் பிள்ளைகளை தன்னம்பிக்கையுடன் வளர்க்க வேண்டும்.

துணிச்சல் மற்றும் தைரியத்திற்கு உதாரணமாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தார். அவரைப் போன்று நிர்வாக திறமையுடன் துணிச்சலுடன் பெண்களை வளர்க்க வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய மாநில அரசுகளின் மீது சுட்டிக்காட்டும் அளவிற்கு எந்த குறையும் இல்லாததால், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என கூறியதையே திரும்பத் திரும்ப கூறிவருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், 'கொடநாடு கொலை சம்பவம் குறித்துவிமர்சித்துவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பான விசாரணையின்போது தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சாதிக் பாட்ஷா எவ்வாறு உயிரிழந்தார் என்ற உண்மையை கூற முடியுமா?' என்றுகேள்வி எழுப்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details