தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈ டிவி பாரத் செய்தி எதிரொலி: அகற்றப்பட்ட மின்கம்பங்கள்... மக்கள் நிம்மதி! - disturbing Power poles in alandurai removed after e tv news

கோவை: இரண்டு கோடி ருபாய் செலவில் புதிதாகப் போடப்படும் சாலையின் நடுவே இடையூறாக இருந்த 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் குறித்த நமது செய்தித் தொகுப்பின் எதிரொலியாக மின்வாரிய அலுவலர்கள் அந்தக் கம்பங்களை அகற்றினர்.

disturbing Power poles in alandurai removed after e tv news
disturbing Power poles in alandurai removed after e tv news

By

Published : Mar 17, 2020, 9:51 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறை பேரூராட்சிக்குள்பட்ட மூங்கில் மடைகுட்டையிலிருந்து மசராயன்கோவில் வரை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 கோடி ரூபாய் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.

இதில் 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாலையின் நடுவே இருக்கும் வகையில் தார்ச்சாலை அமைக்கப்படுவது குறித்தும் விவசாயிகளின் கோரிக்கை குறித்தும் நமது ஈடிவி பாரத்தில் கடந்தவாரம் 7ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.

அகற்றப்பட்ட மின் கம்பங்கள்

இதன் எதிரொலியாக தற்போது சாலையின் நடுவே இருந்த 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களை மின்சார வாரிய அலுவலர்கள் அகற்றியுள்ளனர். இதன் காரணமாக விவசாய தோட்டங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் செல்வோர் இனி எந்தக் கவலையும் இல்லாமல் செல்லலாம் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து செய்தி வெளியிட்டு நடவடிக்கை எடுக்க உதவிய ஈடிவி பாரத்திற்கு அப்பகுதி மக்களும் விவசாயிகளும் நன்றி தெரிவித்துள்ளனர்

இதையும் படிங்க... சாலை நடுவே மின் கம்பம்: மாற்றி அமைக்க கோரிக்கை

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details