ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கு உள்பட்ட உலாந்தி, வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் மானாம்பள்ளி ஆகிய பகுதிகளில் கோடைக்காலத்தில் கடும் வறட்சி ஏற்படும். இதனால் காட்டு தீ ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்நிலையில் பொள்ளாச்சி கோட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொள்ளாச்சி கோட்டத்தில் தீ தடுப்பு நடவடிக்கையாக மொத்தம் 635 கி.மீ.,க்கு தீத்தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வனப் பணியாளர்கள் அனைவருக்கும் தீத் தடுப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்களிடையே தீத் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன.