கோவை மாவட்டம் சூலூர் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான தேஜஸ் இலகு ரக விமானம் ஒன்று இன்று பயிற்சி ஈடுபட்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த எரிவாயு டேங்க் ஒன்று கழன்று இருக்கூர் பகுதியில் உள்ள விவசாயம் நிலத்தில் விழந்து பற்றி எறிந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே விமானப்படை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த விமானப் படை அலுவலர்கள் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். பின்னர் வெடித்து சிதறிக் கிடந்த எரிவாயு டேங்க்கின் பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
விவசாய நிலத்தில் விழுந்த எரிவாயு டேங்க் பாகங்கள் அகற்றம்!
கோவை: இருக்கூர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் விழுந்த தேஜஸ் இலகு ரக விமானத்தின் எரிவாயு டேங்க்கின் பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
விவசாய நிலத்தில் விழுந்த பெட்ரோல் டேங்க் பாகங்கள் அகற்றம்
இதுகுறித்து விமானப் படையில் சார்பில் கூறுகையில், இரண்டு இளம் விமானப்படை வீரர்கள் தேஜஸ் இலக ரக விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது, எரிவாயுடேங்க் ஒன்றில் தீப்பிடித்ததை தொடர்ந்து அதை அவர்கள் கழட்டி விட்டுள்ளனர். எனினும் விமானம் பத்திரமாக தரையிரக்கப்பட்டுள்ளது.