கோவை:துடியலூர் பன்னிமடைப் பகுதி கொண்டசாமி நகரில் அருந்ததியினர் மக்கள் வசித்துவருகின்றனர். அவர்கள் பயன்படுத்தி வந்த பாதையின் இடையே தீண்டாமை சுவர் அண்மையில் எழுப்பப்பட்டது.
இதனால் அவர்கள் பாதையை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடமும், ஊராட்சி மன்றத் தலைவரிடமும் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், அந்தச் சுவரை இடிக்க அரசு அலுவலர்கள் உத்தரவிட்டனர். அதன்பேரில், நேற்று(ஆகஸ்ட் 1) அந்த சுவரானது இடிக்கப்பட்டது. விரைந்து நடவடிக்கை எடுத்த அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அப்பகுதி மக்கள், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகள் - அமைச்சர் சக்கரபாணி