கோவை மக்களவைத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவாக, பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த பாஜக, அந்த பொய்யினாலேயே வீழப்போகிறது. பாஜகவின் தேர்தல் அறிக்கையை நக்கலடித்து சிலர் மீம்ஸ் போட்டார்கள். அது நக்கலுக்கு போட்டது என்று தெரியாமல் அதற்கும் பாஜகவினர் வக்காலத்து வாங்குகின்றனர். அதிமுகவும் சரி... பாஜகவும் சரி... பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பற்றி எங்குமே சொல்வதே இல்லை.
5 வருசமாக எதுவும் செய்யாமல் இப்போது பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜிஎஸ்டி வரியை குறைப்பேன் என்கிறார். எந்த கூட்டத்திற்கு வந்தாலும் காவி சட்டையுடன் செல்லும் சி.பி.ராதாகிருஷ்ணன் இப்போது வெள்ளை சட்டை அணிந்து வந்து வாக்கு கேட்கின்றார். அவர் ஜெயித்து வந்தால் உங்களுக்கு காவி சட்டையை போட்டுவிடுவார்.
கோவையில் கரு.பழனியப்பன் பரப்புரை இந்துக்கள் சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். சங்கராச்சாரிக்கு இணையாக சுப்பிரமணிசுவாமியால் உட்கார முடியும், பொன்ராதாகிருஷ்ணனால் உட்கார முடியாது. தமிழிசை ஒருபோதும் நிர்மலா சீத்தாராமன் ஆக முடியாது. பல கோடி மதிப்பிற்கு டிரஸ் போட்ட மோடி இப்பொது வாட்ச்மேன் டிரஸ்ஸை போட்டுக்கொண்டு ஏமாற்றுகின்றார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.