தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாட்டையடி திருவிழா: பக்தர்கள் சாட்டையால் அடித்து நேர்த்திக்கடன்!

கோவையில் 300 ஆண்டுகள் பழமையான கோயில் திருவிழாவில் பக்தர்கள் தங்களைத் தாங்களே சாட்டையால் அடித்துக்கொண்டு நேர்த்திக்கடன் செய்தனர்.

சாட்டையடி திருவிழா: பக்தர்கள் சாட்டையால் அடித்து நேர்த்திக்கடன்!
சாட்டையடி திருவிழா: பக்தர்கள் சாட்டையால் அடித்து நேர்த்திக்கடன்!

By

Published : Dec 13, 2022, 10:29 PM IST

சாட்டையடி திருவிழா: பக்தர்கள் சாட்டையால் அடித்து நேர்த்திக்கடன்!

கோயம்புத்தூர்: கோவையை அடுத்த பூசாரிபாளையம் பகுதியில் 300ஆண்டுகள் பழமை வாய்ந்த அடைக்கலம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தின் கடைசி வாரம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு கோயில் திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து அம்மனின் திருக்கல்யாணம், அபிஷேகம், பிடி மண் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக இன்று மேள தாளங்களுடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பக்தர்கள் தங்களது மீது சாட்டையை சுழற்றி அடித்துக்கொண்டு ஆற்றங்கரையில் இருந்து அம்மனை கோயிலுக்கு அழைத்து வந்தனர். முன்னதாக அம்மனுக்கு படையலிட்டு பூஜை செய்தனர். இந்த சாட்டையடி திருவிழா மூலம் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியது பக்தர்களிடையே பரவசத்தில் ஆழ்த்தியது.

இதையும் படிங்க: சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஒரே நாளில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம்: நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details