கோவை:வாட்டும் கோடை வெயில், வதைக்கும் குளிர் என அனைத்தையும் தாங்கிக் கொள்ளும் நமக்கு பசி ஏற்பட்டுவிட்டால், வேறெந்த வேலைகளையும் செய்யத் தோன்றது. பசிக்கும்போது நேரத்திற்கு எல்லோருக்கும் உணவு கிடைப்பது என்பது கிடையாது. இந்த நிலையில், இவ்வாறு நேரத்திற்கு உணவின்றி பசியால் வாடும் ஏழை எளிய மக்களின் துயரைப் போக்கி, உணவளிக்கும் பணியை கோயம்புத்தூரில் தெய்வேந்திரன் அறக்கட்டளை மிகவும் சிறப்பாக செய்து வருகிறது.
இதற்கு இந்த அறக்கட்டளை பெறும் தொகையோ ஒரு ரூபாய் மட்டுமே என்பது மற்றொரு சிறப்பு. இதனால், தினமும் ஒரு ரூபாய்க்கு இந்த அறக்கட்டளையினர் அளிக்கும் உணவைப் பெற ஏழை எளியோர் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று அவற்றை உண்டு மகிழ்கின்றனர்.
கோவையில் குறைந்த விலையில் உணவு வழங்கும் சேவையை, பல்வேறு அமைப்பினரும் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையினர், ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கி வருகின்றனர். ஐந்து விதமான வெரைட்டி சாதங்களை திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தின் ஐந்து நாட்களும் வழங்கி வருகின்றனர். இந்த உணவைப் பெற, கோவை நகரின் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வருகை புரிந்து நீண்ட வரிசையில் நின்று உணவுப் பொட்டலங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இதையும் படிங்க: மாமன்னன் படத்தைத் திரையிட்டால் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம்; பூலித்தேவர் மக்கள் முன்றேற்றக் கழகம் மிரட்டல்!