கோவை: மாநகரம் மற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் இரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சமீரன் பிறப்பித்த உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கோவை பெரிய கடை வீதி, வைசியால் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6 குழுக்களாக பிரிந்து மொத்த விற்பனை பழக்கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இரசாயனம் மூலம் பழுக்க வைத்த 14 டன் பழங்கள் அழிப்பு - ரசாயன மாம்பழம்
கோவையில் இரசாயனம் மூலம் பழுக்க வைத்த 14 டன் பழங்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அழித்துள்ளனர்.
இந்த சோதனையில் 42 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரசாயனம் மூலம் பழுக்க வைத்த சுமார் 12 டன் மாம்பழம் மற்றும் 2 டன் சாத்துக்குடி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து அந்த பழங்கள் குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது. இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், “மக்களுக்கு கேடு விளைவிக்கும் இரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்தால் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அபராதம் மட்டுமின்றி நீதிமன்ற நடவடிக்கைக்கும் அவர்கள் உட்படுத்தப்படுவார்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:உடல் எடையை குறைக்க உதவும் 8 ஆசனங்கள்!