தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மு.க.ஸ்டாலின் கனவில் தான் முதலமைச்சர்' - துணை சபாநாயகர் அதிரடி! - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

கோவை: மு.க.ஸ்டாலின் எப்போதும் கனவு முதலமைச்சர் தான், நிஜ வாழ்கையில் முதலமைச்சராக முடியாது என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்துள்ளார்.

pollachi Jayaraman

By

Published : Oct 20, 2019, 1:06 PM IST

கோவை, பொள்ளாச்சியிலுள்ள நகராட்சி அலுவலகத்தில் பேரிடர் கால மீட்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அதில் அவர் 'ஆனைமலையாறு, நல்லாறு அணைத் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக இரண்டு மாநில குழுக்கள் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு - கேரளா ஆகிய இரு மாநில முதலமைச்சர்களிடமும் கலந்து பேசப்பட்டு வந்தது. விரைவில் இந்த திட்டங்கள் கையெழுத்தாகவுள்ளது.

அத்திக்கடவு, அவினாசி திட்டங்களைப் போல் இத்திட்டங்களையும் நிறைவேற்ற முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் மக்கள் அதிமுகவிற்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டியளித்த போது...

எனவே இரு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும்' என்றார்.

இதையடுத்து செய்தியளர்கள் ஸ்டாலின் பற்றி கேள்வியெழுப்பியதற்கு அவர் 'திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கனவில் தான் முதலமைச்சராக இருக்க முடியும். ஒரு போதும் அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வாய்ப்பே இல்லை' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பருவமழையை எதிர்கொள்வது குறித்து பேரிடர் மீட்பு குழுவிற்கு செயல்முறை விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details