தமிழ்நாடு

tamil nadu

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பொள்ளாச்சி ஜெயராமன்!

கோயம்புத்தூர்: தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கரோனா தொற்று இருப்பதாக வரும் செய்தி வெறும் வதந்தி என பொள்ளாச்சி ஜெயராமன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

By

Published : Apr 23, 2020, 3:04 PM IST

Published : Apr 23, 2020, 3:04 PM IST

deputy speaker pollachi jayaraman says he is not affected by corona
deputy speaker pollachi jayaraman says he is not affected by corona

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், தனது தொகுதியில் தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை தினந்தோறும் வழங்கிவருகிறார். இதைத்தொடர்ந்து நாள்தோறும் 20 ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவும் வழங்கிவருகிறார்.

இந்நிலையில் அவருடன் பாதுகாப்புப் பணியில் இருந்த விஐபி எஸ்கார்ட் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் அவருக்குக் கரோனா தொற்று இருப்பதாக செய்தித்தாள்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்தி வெளியானது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக அவர் காணொலி காட்சி ஒன்றில் பதில் அளித்துள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன் காணொலி

அந்தக் காணொலியில் "செய்தித்தாள், சமூக வலைதளங்களில் எனக்கு கரோனா தொற்று இருப்பதாகப் பொய் வதந்திகள் வந்துள்ளன. எதிர்க்கட்சியினர் பொய் வதந்திகளைப் பரப்பிவருகின்றனர்.

அவர்களால் முடிந்தால் கரோனாவை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு முடிந்த உதவி செய்ய வேண்டும், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் ஒரு நோயை எதிர்க்கும் வகையில் போராட வேண்டிய சூழ்நிலையில் பொய் வதந்திகளை கிளப்புவது அநாகரிகமான செயல்" என்று கூறினார்.

இதையும் படிங்க... கரோனா நிவாரண பொருள்கள் வழங்கும பணியை தொடங்கி வைத்த பொள்ளாச்சி ஜெயராமன்

ABOUT THE AUTHOR

...view details