கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கும்விதமாக, கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மார்ச் இறுதிவரை பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சாதாரண வழக்குகளுக்கு வாய்தா மட்டும் அளிக்கப்படுகிறது.
முக்கியக் குற்றவாளிகளைத் தவிர பிற குற்றவாளிகளுக்கு வாய்தா சிறையிலேயே வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதைப் போலவே, மக்கள் அதிகம் கூடும் இடமான அரசு மருத்துவமனையிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளியைக் காண ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பிலும், கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதன் ஒருபகுதியாக, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனை முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
அவ்வழியாக வந்த அவசர ஊர்திகள், கனரக வாகனங்கள் மீதும் மருந்தடிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது, பேருந்திலிருந்த பயணிகள் மீது மருந்தடிக்கப்பட்டதால், பயணிகள் முகம் சுழித்தனர்.
இதையும் படிங்க: ஸ்பெயினிலிருந்து திரும்பிய கோவை மாணவிக்கு கரோனா!