டெங்கு காய்ச்சல் அதிகளவு பரவி வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு, கொசு பரவாமல் இருக்க மக்களிடையே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. காய்ச்சலுக்காக மருத்துமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு கசாயம் போன்ற இயற்கை மருந்துகளை கொடுத்து வருகின்றனர்.
கோயம்புத்தூரில் பரவும் டெங்கு காய்ச்சல்!
கோயம்புத்தூர் : டெங்கு, வைரஸ் காய்ச்சல்களால் 90க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சல்
இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் 14 பேரும், வைரஸ் காய்ச்சலால் 80 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக மருத்துவமனையில் தனி இடம் ஒதுக்கி தனி படுக்கைகள் அளிக்கப்பட்டு சுழற்சி முறையில் மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : டெங்கு காய்ச்சல் - மாணவர்களுடன் நகராட்சி அலுவலர்கள் வீடுகளில் ஆய்வு!