கோயம்புத்தூர்: தமிழ்நாடு அரசு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாதந்தோறும் மின் கட்டண செலுத்தும் முறையை அமல்படுத்த கோரியும் உக்கடம் பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது இப்ராகிம் தலைமையில் சிம்னி விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.