தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இஐஏ அறிக்கையை தனியார் முதலாளிகளுக்கு சாதமாக உள்ளது' - சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு க்கு எதிராக போராட்டம்

கோயம்புத்தூர்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை தனியார் முதலாளிகளுக்கு சாதகமாக உள்ளது என அனைத்து முற்போக்கு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

போராட்டம்
போராட்டம்

By

Published : Aug 1, 2020, 1:39 AM IST

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கையை (இஐஏ) கண்டித்தும் திரும்பப்பெறக் கோரியும் காந்திபுரம் பகுதியில் அனைத்து முற்போக்கு இயக்கம் சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.


அப்போது அவர்கள், ”இஐஏ அறிக்கைக்கு பல்வேறு கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இதற்கு எதிர்ப்புகள் அதிகரித்துவருகிறது. இந்தப் புதிய திருத்தம் தனியார் முதலாளிகளுக்குச் சாதகமாக உள்ளது.

இதனால் மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுவர். சுற்றுச்சூழலும் அதிக அளவில் பாதிக்கப்படும். இது சட்டமாக நிறைவேற்றப்பட்டால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மக்களிடம் அனுமதி பெறாமலேயே தொழிற்சாலைகள் நடத்தி சுற்றுச்சூழலுக்கும் அங்கு இருக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்” என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details