தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நள்ளிரவில் எரிக்கப்பட்ட நீதி - மக்கள் அதிகாரம் கட்சி ஆர்ப்பாட்டம் - மக்கள் அதிகாரம் கட்சி ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மக்கள் அதிகாரம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

uttarapradesh
uttarapradesh

By

Published : Oct 20, 2020, 7:09 PM IST

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் நாக்கை அறுத்து, முதுகெலும்புகள் உடைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 19 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோயம்புத்தூர் பாடாபத் பகுதியில் மக்கள் அதிகாரம் கட்சியினர் 20க்கும் மேற்பட்டோர் இச்சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, "நள்ளிரவில் எரிக்கப்பட்ட நீதி, உ.பி., சாமியாரின் குண்டாஸ் ஆட்சியை நீக்கு" ஆகிய வாசகங்கள் நிறைந்த பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, "ஹத்ராஸில் நடந்த அந்தக் கொடுமைக்கு இன்றுவரை நீதி வழங்கப்படவில்லை.

உ.பி. சாமியாரின் குண்டாஸ் ஆட்சியை நீக்கு

இதுபோன்று இந்தியாவில் பல்வேறு இடங்களில் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு - உடற்கூறாய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details