கோவை: நெல்லையில் உள்ள பள்ளியின் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சிதிலமடைந்து இடியும் தருவாயில் உள்ள பள்ளிகளை இடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சியின்கீழ் உள்ள பழைய, சிதிலமடைந்த அரசுப் பள்ளிகளைக் கண்டறிந்து இடிக்க மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின்பேரில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் கட்டடத்தை இடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் உள்ள பழைய பள்ளி கட்டடங்களை இடிக்கும் பணி கோவை பெரியகடை வீதி, காளப்பட்டி, கணபதி, ஆவாரம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் ஆபத்தான வகையில் உள்ள கட்டடங்கள் இடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
கோவையில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் உள்ள பழைய பள்ளி கட்டடங்களை இடிக்கும் பணி இதையும் படிங்க: Sexual harassment: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - கார் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை