கோயம்புத்தூர் மாவட்டம் தடாகம் பகுதிகளில் செங்கல் சூலைகள் இருக்கின்றன. இங்கு அரசு கொடுத்த அளவை மீறி செம்மண் எடுக்கப்படுகிறது. இதனால் கனிம வள கொள்ளை அதிகரித்துவருவதால், இயற்கை சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே இது குறித்து புகார்கள் எழுந்தன. அப்புகாரின் அடிப்படையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மாசு கட்டுப்பாட்டு வாரியம், புவியியல் துறையினர், வடக்கு வட்டாட்சி அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டதனைத் தொடர்ந்து செம்மண் எடுப்பது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக செங்கல் தயாரிப்பு பணிகளும் முடங்கின. தற்போது அரசு தளர்வுகளை அறிவித்த நிலையில் தடாகம் பகுதிகளில் மீண்டும் செம்மண் எடுக்கும் பணி முழு வீச்சில் தொடங்கிவிட்டது.