கோயம்புத்தூர் விக்டோரியா மஹாலில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் வெள்ளலூர் பேருந்து நிலையம் இடமாற்றம் செய்ய கூடாது என்று மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு ஆணையாளர் வெ விளக்கம் அளித்தார்.
கோவை மாமன்றத்தில் வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய கூடாது என்று கோரிக்கை - coimbatore
கோவை மாமன்ற கூட்டத்தில் வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய கூடாது என்று அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன் கோரிக்கை வைத்தார்.
கோவையில் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டாம் என கோரிக்கை
அதில் மத்திய அரசின் ரைட்ஸ் என்ற அமைப்பு சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்த பேருந்துநிலையத்திற்கான ரிப்போர்ட்டை அவர்கள் மாநகராட்சியிடம் தருவார்கள். இந்த ரிப்போர்ட் இன்னும் வரவில்லை.
வந்த உடன் மாமன்றத்தில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறுவோம். அதன்பின் தமிழ்நாடு அரசுக்கு அனுப்புவோம். ஆகவே தற்போது வரை வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.இதையும் படிங்க: வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய கூடாது... கோவை அதிமுக ஆர்ப்பாட்டம்...